திருவள்ளூர் மாவட்டம், தேவி மீனாட்சி நகர் தாமிரபரணி தெருவில் உள்ள தெரு மின்விளக்குகள் எரியாமல் இருந்தன. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தெரு மின்விளக்குகளை மாற்றினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.