நாமக்கல் - திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இதையொட்டி இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. வலதுபுறம் உள்ள சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் உயர்மின் விளக்கு பொருத்தி, பாதுகாப்பான பயணத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.