புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு தெற்கு முக்கம் பகுதியில் இருந்து மல்லிகைபுஞ்சை வழியாக செல்லும் இணைப்பு சாலையின் ஓரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின்கம்பங்களில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகள் தாழ்வாக செல்வதினால் இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் இந்த மின்கம்பிகளில் உரசி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.