ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-09-10 11:37 GMT
விக்கிரமசிங்கபுரம் 6-வது வார்டு கட்டபொம்மன் காலனி சுனை அம்மன் கோவில் அருகில் உள்ள மின்கம்பத்தின் உச்சி பகுதியில் கான்கிரீட் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்