சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-07-25 14:44 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே மணலூர் ஊராட்சியில் கேசம்பட்டி, கட்டுகுடிபட்டி கிராம பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து நிலையில் உள்ளது. குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த  மின்கம்பத்தினால்  விபரீதம் ஏற்படும் அபாயம்  உள்ளது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது.  எனவே அசம்பாவிதங்கள் நடைபெறும்  முன்பாக இந்த மின்கம்பத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்