பண்ருட்டி-உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் சோமாசிபாளையம் அருகே தெருமின்விளக்கு இல்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் தெருமின்விளக்கு அமைப்பது அவசியமாகும்.