சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, காரைக்குடி சாலையில் செல்லும் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவில் இந்த வழியாக செல்லும் வாகனங்களும், எதிர் திசையில் வரும் வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றன. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் அதிக வெளிச்சத்தில் மற்ற பிற வாகனங்களின் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் மின்விளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.