களக்காடு அண்ணா சாலையில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் அருணா ஆஸ்பத்திரி அருகில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான சாய்ந்த மின்கம்பத்தை நேராக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.