தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-09-03 11:53 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி பகுதியில் மார்க்கெட் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாயிற்படியின் மேலே உயர் மின்னழுத்த கம்பி செல்கின்றது. இந்த உயர் மின்னழுத்த கம்பி பள்ளிக்கு நோட்டு புத்தகம் ஆகியவை ஏற்றி வரும் லாரிகளில் சில நேரங்களில் சிக்கி விடுகின்றது. மிகவும் தாழ்வாக செல்வதால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது . உடனடியாக தாழ்வாக செல்லும் உயர் மின்னழுத்த கம்பியை சரி செய்தும், பள்ளி அருகே வளைந்து நிற்கும் மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்