ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் உள்ள நவபாசாண கோவிலுக்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் போதுமானதாக இல்லை. பெரும்பாலான இடங்கள் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் மின்விளக்கு பொருத்தி மின்வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.