மாற்றி அமைக்கப்பட்டது

Update: 2023-08-30 09:05 GMT

மாற்றி அமைக்கப்பட்டது

இனயம் இனிய நகர் பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின் கம்பத்தில் தெருவிளக்குக்கான சுவிட் பெட்டி பொருத்தப்பட்டு இருந்தது. அது சேதமடைந்து, சிறுவர்கள் தொடும் தூரத்தில் இருந்தது. எனவே அந்த பெட்டியை மாற்றி சிறுவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேறு சுவிட் பெட்டியை சிறுவர்களுக்கு எட்டாத தூரத்தில் அமைத்துள்ளனர். இதற்காக ‘தினத்தந்தி’ மற்றும் அதிகாரிகளுக்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

--

மேலும் செய்திகள்