காட்டுமன்னார்கோவிலில் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வரை தெருமின்விளக்குகள் அமைக்கபடவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் தெருமின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.