செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் செல்லும் சாலையின் முகப்பில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். அருகில் உள்ள இரு மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பங்கள் முறிந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. ஆகையால் அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்குள் மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
