சென்னை கொளத்தூர், அகரம் 4 முனை தெருவில் உள்ள சாலையில் போக்குவரத்து சிக்னல் விளக்கு கடந்த 2 வருடங்களுக்கு மேல் செயல்படாமல் உள்ளது. இதனால் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெறிசலில் சிக்கி மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து சிக்னல் விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.