திருவள்ளூர், மணலி புதுநகர் பிரதான சாலையில் சுந்தர விநாயகர் கோயில் அருகில் உள்ள பாலத்தில் தெருவிளக்கு இல்லாமல் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புதிதாக தெருவிளக்கு அமைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.