பழுதடைந்த மின்கம்பம்

Update: 2023-08-23 12:00 GMT

திருவாரூர் மாவட்டம் விழல்கோட்டகம் பகுதி தேவங்குடி சாலையில் மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்