பந்தலூரில் உள்ள இன்கோ நகரில் தெருவிளக்கு வசதி இல்லை. இதன் காரணமாக அந்த பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் இரவில் வெளியே நடமாடவே அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே உடனடியாக தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.