நாமக்கல் மாவட்டம் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் மல்லூர் செல்லும் சாலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதன் காரணமாக மதுபிரியர்கள் அங்கு கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகிறார்கள். மேலும் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இரவு நேரத்தில் மின் விளக்கை எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.