நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பாதரை இந்திரா நகர் மாரியம்மன் கோவில் அருகே வீதியின் நடுவே மின்கம்பம் நடப்பட்டதில் பொதுமக்கள் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. இதனை மின்கம்பத்தை ஓரமாக நட பஞ்சாயத்திலும், மின்வாரிய அலுவலகத்திலும் சுமார் 15 வருடங்களாக கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனியாவது அந்த மின்கம்பத்தை சாலையோரம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.