திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி 24-வது வார்டு பெரியார் தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்டு காரைகள் பெயர்ந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்குள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.