தர்மபுரி- சேலம் சாலையில் தர்மபுரி நகர்ப்பகுதியில் இருந்து ஒட்டப்பட்டி வரை உள்ள சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்த சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் சாலை இருளில் மூழ்குகிறது. மேலும் போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்து, வழிப்பறி சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. எனவே இந்த மின்விளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.