மின்கம்பத்தை சீரமைப்பது அவசியம்

Update: 2023-08-13 12:10 GMT
சிதம்பரம் அருகே ஜோசப் நகரில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி அமைந்துள்ள மின்கம்பங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து உடைந்து விழும் நிலையில் காணப்படுகிறது. மேலும் மின்மாற்றி வழியாக அப்பகுதி பொதுமக்கள் பலர் சென்று வருகின்றனர். எந்த நேரத்திலும் மின்கம்பம் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. ஆகவே அசம்பாவிதம் ஏதும் நடைபெறும் முன்னதாக சேதமடைந்த மின்கம்பங்களை மின் ஊழியர்கள் சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்