திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்ஜி நகரில் இருந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி செல்கின்றனர். மேலும் இருளைப் பயன்படுத்தி சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.