விபத்து அபாயம்

Update: 2023-08-13 09:04 GMT

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஏராளமான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்களுக்கான மின் இணைப்பு பெட்டி கடற்கரையில் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இரும்பு பெட்டி துருபிடித்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும், சில நேரங்களில் அந்த பெட்டியின் மீது மின்சாரம் பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மின்விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் நலன்கருதி சேதமடைந்த மின் இணைப்பு பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்