கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பாத்திமாபுரம் செல்லும் சாலையில் ஒரு மின் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்கின் சுவிட்சு பெட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள், சிறு பிள்ளைகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சுவிட்சு பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.