ஓட்டேரி ஏகாங்கிபுரம் 4-வது தெருவில் இருக்கும் மின் இணைப்பு பெட்டியின் உதிரி பாகங்கள் பழுதடைந்திருப்பது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இந்த நிலையில் பழுதடைந்த உதிரி பாகங்கள் மின் வாரிய அதிகாரிகளால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.