பரங்கிப்பேட்டையில் கனரக வாகன ஓட்டிகள் அதிக உயரங்களில் லோடுகளை ஏற்றிச்செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பிகளில் உரசுகிறது. சில நேரங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுகிறது. இதனால் அப்பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கனரக வாகனங்களில் அதிக உயரங்களில் பொருட்களை ஏற்றி செல்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.