கரூர் மாவட்டம் கோம்புப்பாளையத்திலிருந்து நத்தமேடு செல்லும் புகழூர் வாய்க்கால் கரை சாலை வழியாக மின்கம்பம் அமைக்கப்பட்டு அந்த மின் கம்பத்தின் வழியாக மின் கம்பிகள் செல்கிறது. இந்த மின்கம்பியில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் வாகனத்தில் செல்வோர் மீது மின் கம்பிகள் மோதக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது. எனவே கோம்புப்பாளையத்திலிருந்து நத்தமேடு செல்லும் வாய்க்கால் கரைசாலை வழியாக செல்லும் மின் கம்பியை சீரமைத்து விபத்தினை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.