புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரியில் புகழ் மிக்க சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கறம்பக்குடியில் இருந்து திருமணஞ்சேரிக்கு செல்லும் சாலையில் தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கின்றன. இதனால் இரவு நேரத்தில் அந்த சாலையில் செல்லும் கிராம மக்கள், பக்தர்கள் சிரமபடுகின்றனர். எனவே திருமணஞ்சேரி சாலையில் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.