சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தென்மாபட்டு தெருவில் மின்கம்பமானது சாலையின் நடுவே உள்ளது. இது பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. மேலும் இரவுநேரங்களில் வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை சாலையோரத்தில் மாற்றியமைக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.