இருளில் மூழ்கும் சாலை

Update: 2023-07-23 14:31 GMT

தர்மபுரி பாரதிபுரம் பகுதியில் 66 அடி சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நிறுத்தும் பணிமனை, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அதிகாலை முதல் நள்ளிரவு வரை அதிக வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இந்த சாலையின் மைய தடுப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் சரியாக எரிவது இல்லை. இதனால் இந்த சாலை இரவு நேரத்தில் இருளில் மூழ்கி உள்ளது. இந்த மின் விளக்குகளை இரவு நேரங்களில் எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்