பண்ருட்டி அருகே தட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள மின்மாற்றியை தாங்கி நிற்கும் கம்பங்கள் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதால், மின்கம்பம் மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுகிறது. இதனால் எந்நேரத்திலும் மின்மாற்றி விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்மாற்றியில் சேதமடைந்த கம்பத்தை அப்புறப்படுத்திவிட்டு, புதிய கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.