ஒளிராத மின்விளக்குகள்

Update: 2023-07-16 12:45 GMT

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கடந்த சில வாரங்களாக சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஒளிராமல் இருக்கும் மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்