தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-07-16 12:28 GMT
  • whatsapp icon

மயிலாடுதுறை மாவட்டம் 24.வில்லியநல்லூர் பஞ்சாயத்து கொண்டல் ஆற்றங்கரை தெருவில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் அருகே கருவேல மரங்கள், மூங்கில்கள் அதிகளவில் உள்ளன. பலத்த காற்று வீசும் போது மரக்கிளைகளில் மின்கம்பி சிக்கி அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்