பண்ருட்டி தாலுகா சின்னசேமகோட்டை கிராமம் சேலம் மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பம் பலத்த சேதமடைந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருவதால், மின்கம்பம் மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுகிறது. இதனால் எந்நேரத்திலும் மின்கம்பம் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்திவிட்டு, புதிய மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.