விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் சென்னை-திருச்சி சாலையை இணைக்கும் வகையில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் நடுவே விபத்தை ஏற்படுத்தும் வகையில் மின்கம்பம் அமைந்துள்ளது. எனவே மின்கம்பத்தை அப்புறப்படுத்தி விட்டு, வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.