செங்கல்பட்டு, பழைய பெருங்களத்தூர் கண்ணகி தெருவில் கழிவுநீர் கால்வாய் செல்லும் வழியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. கால்வாயில் கழிவுநீர் செல்வதால் மின்கம்பம் அடிப்பகுதி சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் நடப்பதற்குள் வேறு இடத்தில் புதிய மின்கம்பம் உடனடியாக அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.