மேக்காமண்டபம் பகுதியில் இருந்து செம்பருத்திவிளை செல்லும் சாலையில் குருவிகாடு உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தின் மேல்பகுதி மிகவும் சேதடைந்து எப்போது வேண்டுமானாலும் காற்றின் வேகத்தில் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால்,அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்து காணப்படும் மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்ைத நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.