திட்டுவிளையை அடுத்த அனந்தனாறு கால்வாயின் வலதுபுறம் ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் காரியாங்கோணம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சேதமடைந்து சரிந்த நிலையில் காணப்படுகிறது. காற்றின் வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சரிந்து சாலையில் செல்வோர் மீது விழுந்து விபத்து ஏற்படுலாம். எனவே, சரிந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சமியன்பிள்ளை, காயிதேமில்லத்நகர்.