மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2023-07-09 15:44 GMT

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டில் மின்கம்பம் சாக்கடை கால்வாயையொட்டி உள்ளது. இந்த மின்கம்பத்தின் அஸ்திவாரம் சிமெண்டு கான்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இது உறுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே சாயும் நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை உடனே மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்