நாகை மாவட்டம் நாகூர் அரசு ஆஸ்பத்திரி அருகே இரும்பு மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் வளைந்த நிலையில் இருக்கிறது. மின்கம்பத்தின் அடிப்பகுதி முழுவதும் சேதமடைந்து உள்ளது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் சூழல் நிலவுகிறது. ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தால் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.