தேனி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து விளையாட்டு மைதானம், வட்டார போக்குவரத்து அலுவலகம், புதிய பஸ் நிலையம் செல்லும் பாதைகளில் தினமும் காலை, மாலை நேரத்தில் ஏராளமான மக்கள் நடைபயிற்சி செல்கின்றனர். ஆனால் அந்த பகுதிகளில் போதிய அளவில் தெருவிளக்குகள் இல்லை. அதுவும் சில நேரம் எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் இருளில் நடைபயிற்சி செல்லும் நிலை உள்ளது. எனவே தெருவிளக்குகளை சரிசெய்வதோடு, கூடுதல் தெருவிளக்குகள் பொருத்த வேண்டும்.