பழனி வேல் ரவுண்டானாவில் இருந்து திருஆவினன்குடி செல்லும் குளத்து ரோட்டின் இருபுறமும் கடந்த பல வாரங்களாக மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவில் அந்த சாலையே இருளில் மூழ்கி காட்சியளிக்கிறது. அந்த வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இருளில் மூழ்கி உள்ளதால் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடக்க ஏதுவாக அமைகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் மின்விளக்கு எரியாமல் இருப்பதை சரி செய்ய வேண்டும்.