தர்மபுரி நகரில் மிக அதிக வாகன போக்குவரத்து கொண்ட பகுதியாக பெரியார் சிலை 3 சாலை சந்திப்பாக உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்ட உயர் மின்கோபுர விளக்கு கடந்த 2 வாரங்களாக இரவில் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் போதிய வெளிச்சம் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த உயர் கோபுர மின்விளக்கை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.