தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-07-02 10:22 GMT

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனை அடுத்த கொரடாச்சேரி செல்லும் சாலை முகூந்தனூர் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. மேலும், மின்கம்பிகள் தாழ்வாக மரக்கிளைகளுக்கு இடையே செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள், அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்