நாகை மாவட்டம் கிடாமங்கலம் மெயின் சாலையில் மின்மாற்றி ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக மின்மாற்றியை தாங்கி பிடித்துள்ள மின்கம்பங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் சூழல் நிலவுகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்