திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஆவூர்-கோவிந்தகுடி இடைபட்ட சாலையில் போதுமான மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி மர்மநபர்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் வழிப்பறியில் அவ்வபோது ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஆவூர்-கோவிந்தகுடி சாலையில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போதுமான மின்விளக்குகள் அமைக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுப்பார்களா?