விருத்தாசலம் பாலாஜி நகர் தெற்கு பகுதி சோனியா காந்தி வீதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து எலும்புக்கூடாக காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.