மின்விளக்குகளை சரிசெய்ய கோரிக்கை

Update: 2023-06-28 12:05 GMT
  • whatsapp icon
அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது முனியங்குறிச்சி, சேலத்தார்காடு, மு.புத்தூர் கிராமங்கள். இந்த கிராமங்களுக்கு செல்லும் முதன்மை சாலையாக முனியங்குறிச்சி பிரிவு சாலை உள்ளது. இந்தநிலையில் இங்குள்ள உயர்மின்கோபுரத்தில் மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உயர்மின் கோபுரத்தில் மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்