அரவக்குறிச்சி தாராபுரம் சாலையில் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள மின்கம்பம் மிகவும் சிதிலம்படைத்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றது. மேலும் கம்பிகள் துருப்பிடித்து காணப்படுவதினால், பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.